‘பிகில்’ ஆடியோ விழாவில் இருந்து விரட்டப்பட்ட யோகிபாபு?

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவினை பார்க்க வெளியூரில் இருந்து விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் லேசான தடியடி நடத்தியதாகவும் இதில் சில விஜய் ரசிகர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த யோகிபாபுவை போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் டுவிட்டரில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ உண்மைதானா? என்பதை யோகிபாபு விளக்கம் வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது

Leave a Reply