பிகில் ஆடியோ விழாவில் பேனர் பிரச்சினையை கிளப்ப விஜய் திட்டமா?

விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில் விஜய் என்று எதைப் பற்றி பேசுவார் என்று விஜய் ரசிகர்களிடையே பரபரப்பாக உள்ளது

ஒவ்வொரு ஆடியோ விழாவிலும் விஜய் பஞ்ச் டயலாக் பேசுவதும் ஏதாவது ஒரு சமூக கருத்தை கூறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய விழாவின் போது அவர் சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ மரணமடைந்த சுபஸ்ரீ சம்பவம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது கருத்து கூறினால் ஒருசில அரசியல்வாதிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அதனால் இந்த படத்திற்கு மெர்சல், சர்க்கார் போல் இலவச விளம்பரம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் டுவிட் செய்து வருகின்றனர். இது உண்மையா? அல்லது வதந்தியால? என்பதை இன்றைய ஆடியோ விழாவின்போது பார்த்து தெரிந்து கொள்வோம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *