’பிகில்’புள்ளிங்கோகளுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலை
விஜய், நயன்தாராநடித்த ‘பிகில்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதன்படி‘பிகில்’ படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் ‘பிகில் டிரைலர் என்ற ஹேஷ்டாக் டிரெண்டிற்கு வந்துள்ளது
விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த்ள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.