பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்த நடிகர் கலையரசன், தற்போது அவர் தயாரிக்கும் படம் ஒன்றின் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் கலையரசனுடன் முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் மற்றும் ஷராதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் நாயகி ஒரு புதுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி வரும் செப்டம்பரில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *