shadow

பார்க்கிங் சார்ஜ் இல்லை. முதல் காட்சியாக இருந்தாலும் ரூ.150 டிக்கெட்: ஒப்புக்கொள்வார்களா தியேட்டர் உரிமையாளர்கள்?

ஒரு திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்கள் டிக்கெட் கட்டணம் அதிகம் என புலம்புவது மட்டுமின்றி பார்க்கிங் சார்ஜ் மிக அதிகமாக இருப்பதாகவும் திரையரங்கினுள் எந்தவித தின்பண்டங்களையும் அனுமதிப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்

இதற்கு முடிவு கட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு செய்துள்ளது. எந்த தியேட்டரிலும் முதல் நாள் முதல் காட்சி முதல் அனைத்து காட்சிகளிலும் ரூ.150 மட்டுமே கட்டணம் பெற வேண்டும். அதேபோல் பார்க்கிங் சார்ஜ் வாங்க கூடாது. மேலும் படம் பார்க்க வரும் ரசிகர்கள் எந்த தின்பண்டங்கள் எடுத்து வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பதுதான்

ஆனால் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. பார்க்கிங் கட்டணம் மூலம் ஒரு கொழுத்த வருவாயும், பாப்கார்ன், பப்ஸ் உள்பட வெளியே குறைந்த விலையில் விற்கும் பொருட்களை தியேட்டர் உள்ளே ரூ.100 வரை விற்று கிடக்கும் லாபத்தையும் இழக்க முன்வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply