பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல்: துரைமுருகன் கணிப்பு

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக திமுக உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசியதாவது:

வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி. அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரும். தி.மு.க ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் வேலையாக காட்பாடிக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும் அதற்குள் காட்பாடிக்கு தாலுகா மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தாலுகா மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். சிலர் என்னை பற்றி அவதூறாக பேசி குறை கூறி வருகின்றனர். அவர்கள் எல்லாம் சாயம் போகக்கூடியவர்கள் அவர்கள் பெயரை நாங்கள் சொல்லக்கூட அவர்களுக்கு தகுதியில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *