பாரதியின் முண்டாசும் முறுக்குமீசையும் எனக்கு பிடிக்கும் ரஜினிகாந்த்

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் வரும் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடவிருக்கும் நிலையில் பாரதி குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ரஜினி கூறியதாவது

பாரதியின் தோற்றம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய முண்டாசு மற்றும் முறுக்குமீசை அந்த காலத்திலேயே நான் வித்தியாசமானவன் என்பதை உணர்த்தி காட்டியவர். பாரதியை கவிஞர் என்று சொல்வதை விட ஞானி என்றே நான் கூறுவேன். தன்னை தான் உண்ர்ந்த மிகப்பெரிய ஞானி அவர். பாரதியின் வார்த்தைகள், எழுத்துகள் இன்னும் சாகாவரம் பெற்று விளங்குவதற்கு காரணம் அவை ஒரு ஞானி என்பதால்தான்.

எனக்கு பாரதியாரின் கவிதைகளில் பிடித்தவை ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய இளைஞர்கள் நல்ல வாழ்க்கை முறையை கற்றுக்கொள்ள திருவள்ளுவர், அவ்வையார், பாரதியார் ஆகியோர்களின் நூல்களை படித்தாலே போதும். இவ்வாறு ரஜினிகாந்த், பாரதியார் குறித்து கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *