shadow

பாப்பாவைப் பார்க்கப் போறீங்களா?

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, குழந்தையைப் பார்க்கச் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொடர் இருமல், தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையைப் பார்க்கச் செல்ல வேண்டாம்.

பெர்ஃப்யூம், சென்ட், சிகரெட், மது ஆகியவற்றை குழந்தையைப் பார்க்கச் செல்லும்போது தவிர்க்கவேண்டும்.

குழந்தை பிறந்து 24 மணி நேரம் கழித்த பிறகு பார்க்கச் செல்வது நல்லது. இதனால், தாய்க்கும் சேய்க்கும் நல்ல ஓய்வு கிடைக்கும்.

15 நிமிடத்துக்குள் குழந்தையைப் பார்த்துவிட்டு, வெளியில் வந்து விடுங்கள். நீண்ட நேரம் இருப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும்.

அதிக சத்தத்துடன் பேசுவது, அரட்டை அடிப்பது போன்றவற்றைக் குழந்தை முன் செய்யக்கூடாது.

ஆசையாகக் குழந்தையை அழுத்திக் கிள்ளுவது, முத்தமிடுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

நெட் (வலைப்பின்னல்), கற்கள், மணிகள் வைத்த ஆடைகளைக் குழந்தைக்குப் பரிசாகத் தரவேண்டாம். பருத்தி ஆடைகளை வாங்கித் தரலாம்.

குழந்தைக்கு, தாயார் பால் கொடுக்கும் நேரமாக இருந்தால், சிறிது நேரம் வெளியே காத்திருந்த பின் குழந்தையைப் பார்க்கச் செல்லலாம்.

குழந்தைகாகப் பவுடர், சோப், பேபி மசாஜ் எண்ணெய் போன்றவற்றை வாங்கித் தராதீர்கள். ஏற்கெனவே நிறைய பேர் அவற்றை வாங்கித் தந்திருப்பார்கள். நட்ஸ், விதைகள், பழங்கள் போன்ற சத்தான ஆகாரங்களை வாங்கித் தரலாம். இதனால், தாய் ஆரோக்கியமாவார்; தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply