பாடகராக மாறிய ‘மொட்டை’ ராஜேந்திரன்

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவருடைய குரல் இவரது நடிப்பிற்கு பெரும் பாசிட்டிவ்வாக இருக்கும்

இந்த நிலையில் மொட்டை ராஜேந்திரன் தற்போது பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையில் உருவாகும் ஒரு படத்திற்கு மொட்டை ராஜேந்திரன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடைபெற்றபோது எந்தவிதமான சிரமமும் இன்றி மொட்டை ராஜேந்திரன் பாடி முடித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக அறிமுகமான ராஜேந்திரன் அதன்பின்னர் ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *