பாஜக வேட்பாளராகும் பிரபல கிரிக்கெட் வீரர்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கடந்த டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் இவர் அடுத்ததாக அரசியலில் குதிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

டெல்லியை சேர்ந்த கவுதம் காம்பிர் புது டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த தொகுதியின் பாஜக எம்.பி.யாக மீனாட்சி லேஹி இருக்கும் நிலையில் வரும் தேர்தலில் கவுதம் காம்பீருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அமிர்தசரஸில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை ஆதரித்து கவுதம் காம்பீர் பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கவுதம் காம்பீர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *