பாஜக ரிசல்ட் போலவே திடீரென இறங்கி ஏறிய சென்செக்ஸ்

இன்று காலை எட்டு மணிக்கு குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிய நிலையில் ஆரம்பகட்ட முடிவுகள் பாஜகவுக்கு பாதகமாக இருந்ததால் பங்குவர்த்தகத்தில் திடீர் சரிவு ஏற்பட்டது. காலை ஒன்பது மணிக்கு பங்குச்சந்தை ஆரம்பமானவுடன் சுமார் 800 புள்ளிகள் வரை இறங்கின. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் ஒருசில மணி நேரத்தில் பாஜக மீண்டும் முன்னிலை என்ற தகவல் வந்தது. குறிப்பாக 100க்கும் மேற்பட்ட இடங்களுடன் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டதால் பங்குச்சந்தையில் நல்ல ஏற்றம் கிடைத்தது. தற்போது பங்குச்சந்தை இறங்கிய 800 புள்ளிகளை மீட்டு, மேலும் 150 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் தற்போது முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *