shadow

பாஜக கூட்டணியில் திமுக, தம்பிதுரை பாஜக வேட்பாளர்: தினகரன் கணிப்பு

கடந்த சில மாதங்களாகவே பாஜக மீதான விமர்சனத்தை திமுக குறைத்துள்ளது. வரும் பாராளூமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை கூட்டணி இல்லையென்றாலும் தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் பாஜகவுக்கு திமுக ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமமுக துணை பொதுசெயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.எல்.ஏவுமான தினகரன் இதுகுறித்து கூறியபோது, ‘ஸ்டாலின் பேச்சை பார்க்கும்போது, பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள் என்பது போலதான் நினைக்க தோன்றுகிறது என்று கூறினார்.

மேலும் அதிமுக எம்பியும் துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தினகரன் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply