shadow

பாஜக எதிரிக்கட்சி இல்லை: திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுவதால் திமுக-பாஜக கூட்டணி அமையுமா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ‘பாஜக எதிர் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணி சந்தேகம் தற்போது வலுவாகியுள்ளது.

வேலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், ‘நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைத்தது இந்தியாவில் இது தான் முதல் முறை’ எனவும் அவர் கூறினார்.

Leave a Reply