பாஜக ஆட்சியின் பச்சை துரோகம் இதுதான்: மு.க.ஸ்டாலின் காரசாரமான அறிக்கை

தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப்பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டதாகவும், தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கழக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவீத முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட்டு தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்ற நிலையை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *