பாஜகவுடன் கூட்டணி: தேமுதிக துணை பொதுச்செயலாளர் சதீஷ்

பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் என தேமுதிக துணை பொதுச்செயலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இணைவதில் தம்பிதுரை உள்ளிட்ட ஒருசிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து பாஜக தனி கூட்டணி அமைக்கும் என தெரிகிறது.

இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் பேச்சுவார்த்தையின் முடிவு தெரியவரும் என்றும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

மேலும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *