Chennai Today News

பாஜகவில் இணைகிறாரா மு.க.அழகிரி?

பாஜகவில் இணைகிறாரா மு.க.அழகிரி?

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர் கட்சி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முடிவை அறிவிப்பதாக மு.க.அழகிரி ஏற்கனவே கூறியிருந்தார்

இந்த நிலையில் அழகிரி அணியில் ஒருசில திமுகவினர் இணைவார்கள், கட்சி இரண்டாகும் என அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதத்தின்போது பேசினர். ஆனால் மு.க.அழகிரி விரைவில் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் முக்கிய பதவி அவருக்கு தரப்படும் என்றும் அதனையடுத்து அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே அழகிரியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஜினிகாந்த் பாஜக ஆதரவு நிலையில் இருப்பதால் இருவரும் ஒரே அணியில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!