பாஜகவில் இணைகிறாரா முக அழகிரி!

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக அழகிரி மீண்டும் திமுகவில் இணைய தீவிர முயற்சி செய்தார். ஆனால் தற்போதைய திமுக தலைவர் முக ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்காததால், கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்

இந்த நிலையில் முக அழகிரி, பாஜகவில் இணைவார் என்றும், ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு அவருடைய கட்சியில் இணைவார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

இந்த நிலையில் இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்களை அவரது காரைக்குடி இல்லத்தில் முக அழகிரி சந்தித்தார். இந்த சந்திப்பு ஒருசில நிமிடங்கள் நடந்ததாகவும் இருவரும் மனம்விட்டு தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்பு காரணமாக முக அழகிரி, பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக இரு தரப்பில் இருந்தும் எந்தவித செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *