பாகுபலி 2, கபாலி, விவேகம் படங்களின் பட்டியலில் மெர்சல்

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த 18ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியும், உலகம் முழுவதும் ரூ.200 கோடியும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர் சென்னையில் பாகுபலி 2, கபாலி, விவேகம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரூ.10 கோடி வசூல் செய்திருந்த நிலையில் ‘மெர்சல்’ படம் நான்காவதாக இணைந்துள்ளது.

மெர்சல் திரைப்படம் கடந்த 18ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.10,88,43,468 வசூலை பெற்று சாதனை செய்துள்ளது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *