பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள தேவாலயம் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது திடீரென தற்கொலைப்படை தாக்கியதால் ஏற்பட்ட கொடூர சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவெட்டா நகரிலுள்ள பெத்தேல் நினைவு தேவாலயத்தில் நேற்று சுமார் 400-க்கும் அதிகமானோர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தேவாலயத்திற்குள் நுழைந்த இரண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினர்

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லப்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் இரண்டு பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. மேலும் 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *