பாகிஸ்தானுக்காக இரண்டு செயற்கைகோள்களை செலுத்திய சீனா

பாகிஸ்தான் நாட்டின் இரண்டு செயற்கோள்களை சீனா தனது மண்ணில் இருந்து விண்ணிற்கு வெற்றிகரமாக செலுத்தியது.

சீனா முதன்முறையாக சர்வதேச செயற்கை கோள் ஒன்றினை விண்ணில் செலுத்து தொடங்கியுள்ளது. இதன்படி பாகிஸ்தான் நாட்டிற்காக பிரஸ்-1 மற்றும் பாக்டெஸ்-1ஏ ஆகிய இரண்டு ஏவுகணைகளை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.

இந்த இரு செயற்கைக் கோள்களில், பிரஸ்-1 என்பது பாகிஸ்தானுக்காக சீனா வடிவமைத்த முதல் ஆப்டிகல்’ வகை தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும். பாக்டெஸ்-1ஏ ஏவுகணை, பாகிஸ்தான் நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 செயற்கைக்கோள்களும் சீனாவில் அமைந்துள்ள ஜிவ்குவான் ஏவுகளத்திலிருந்து நேற்று சீன நேரப்படி மதியம் 11.56 மணிக்கு செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாகவும், அது நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக சீன விண்வெளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *