பள்ளிகள் திறக்கப்படாது

students

கொரானாவின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு இணையதள வகுப்புகள் நடந்து வந்தது.

ஏற்கனவே புதுச்சேரியில் நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முழுவதுமாக குறையாததால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பதாக தெரிவித்தார். பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.