shadow

பத்திரிகையாளர் வேடத்தில் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு அசல் கலெக்டர் போலவே இந்த படத்தில் நயன்தாரா நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்

இந்த நிலையில் கலெக்டரை அடுத்து தற்போது பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சைத்தான், சத்யா படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளார்.

இந்த படம் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான வெற்றிப்படமான ‘யூடர்ன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஷரதா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில் தான் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.

Leave a Reply