பத்திரிகையாளருக்கு அமெரிக்க அதிபரின் மனைவி கடும் கண்டனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை பற்றி மோசமாக விமர்சித்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பெயர் குறிப்பிடாத ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார் டைம்ஸ் இதழில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை எழுதிய பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

பேச்சு சுதந்திரம் என்பது நமது நாட்டின் கொள்கைகளை தோற்றுவிக்கும் ஒரு முக்கியமான தூணாகும், மேலும் ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எனவே பத்திரிகைகள் நியாயமாகவும், நடுநிலையாகவும், பொறுப்பாகவும் இருகக் வேண்டும்.

ஆனால், பெயரே இல்லாதவர்கள் எல்லாம் நமது நாட்டின் வரலாற்றை எழுதுகிறார்கள்.

எழுத்தில் வார்த்தைகள் மிகவும் முக்கியம், யாரேனும் துணிச்சலாக குற்றச்சாட்டுகளை கூறும்போது தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தி அதில் அவர்களின் வார்த்தைகளை நிலைநிறுத்த வேண்டும். இல்லையேல் அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் கடுமையான விளைவுகள் ஏற்படுத்தும்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த எழுத்தாளரை நோக்கி கூறுகிறேன், நீங்கள் நமது நாட்டை பாதுகாக்க முயற்சிக்கவில்லை, மாறாக உங்களின் கோழைத்தனமான செயல்பாடுகளினால் நாட்டை நாசப்படுத்துகிறீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *