shadow

பணம் செய்யும் பாடு: குரூப் டான்சராக மாறிய சல்மான்கான்

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். 2018ஆம் ஆண்டு அதிக வருமானம் பெற்ற நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர். அப்படிப்பட்டவர் முகேஷ் அம்பானியின் மகனுக்காக குரூப் டான்சர்களில் ஒருவராக ஆடியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் நடைபெறவுள்ளதை அடுத்து ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் மெயின் டான்சராக முகேஷ் அம்பானியின் மகன் ஆட, குரூப் டான்சர்களில் ஒருவராக நடிகர் சல்மான்கான் ஆடியுள்ளார்.

பணம் பாதாளம் வரை பாயும் என்ற உண்மையை நிரூபிக்கும் வகையில் இருக்கும் இந்த நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Leave a Reply