shadow

பணமதிப்பிழப்பின் ஒருவருடம்: கருப்புதினமாக அனுசரிக்கும் எதிர்க்கட்சிகள்

கடந்த ஆண்டு இதே நாளில்தான் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் சுமார் ஆறு மாத காலம் பொதுமக்கள் அவதியுற்றனர். தங்அக்ள் வங்கியில் உள்ள பணத்தை கூட எடுக்க முடியாமல், ஏடிஎம் முன் மணிக்கணக்கில் வரிசையில் நின்ற பரிதாபமான காட்சிகளை நாடு முழுவதும் பார்க்க முடிந்தது.

கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வரவே இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு கூறினாலும், கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் இந்த நடவடிக்கையை பயன்படுத்தி வெள்ளையாக மாற்றிவிட்டனர் என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இன்று கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அனுசரிக்கின்றன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தின் சூரத் நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெறும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. மழை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply