shadow

பட்டாசு வாங்க போறிங்களா? அதுக்கும் ஆதார் அட்டை வேண்டும்!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை இல்லையென்றால் வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாது என்ற நிலை வெகுவிரைவில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

ஆதார் அட்டை அவசியம் என்பது கிட்டத்தட்ட அனைத்து நடைமுறைகளுக்கும் வந்துவிட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கவும் ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக இப்போதைக்கு இந்த அறிவிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பட்டாசு வாங்குபவர்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.  ஆனால் அதே நேரத்தில் குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டாசு வாங்கினால் ஆதார் மற்றும் பான் அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

காலப்போக்கில் பட்டாசு வெடிக்க கூட ஆதார் அட்டை கேட்பார்களோ என்று பலர் டுவிட்டரில் கிண்டல் பதிவுகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *