படுக்கையறைச் சுவர்களுக்கான அலங்காரம்!

டுக்கையின் பின்னால் இருக்கும் சுவரைத் திட்டமிட்டு வடிவமைத்தால் படுக்கையறையின் தோற்றத்தை உங்கள் ரசனைக்கு ஏற்றபடி எளிமையாக மாற்றிவிடலாம். இந்தச் சுவரைக் கலைப்பொருட்கள், விளக்குகள், வண்ணங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கலாம். இந்தப் படுக்கைச் சுவர் அலங்காரம் அறையின் தோற்றத்தையும் பெரிதாக்கிக்காட்ட உதவும். படுக்கைச் சுவர்களை வடிவமைப்பதற்கான அலங்காரம்…

பாரம்பரியமான படுக்கையறையை வடிவமைக்க நினைப்பவர்கள், படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரில் பழமையான மரக் கதவைப் பொருத்தலாம். இந்தக் கதவில் ஒரு உலோக விளக்கையும் சிறிய கண்ணாடியையும் பொருத்தலாம்.

பூக்கள் வடிவமைப்பிலான உலோக ஜாலியைக் (Floral Metal Jali) கொண்டும் படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரை வடிவமைக்கலாம். இந்த உலோக வடிவமைப்பு அறைக்கு ரசிக்கத்தக்க அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

விளக்கு அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரில் விளக்கு அலங்காரத்தைக் கொடுக்கும் படுக்கையைத் (Backlit bed) தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகள் அறைக்கு இந்த வடிவமைப்பு பொருத்தமானதாக இருக்கும்.

எளிமையான அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கைச் சுவரை மென்மையான வண்ணங்களாலான சுவரொட்டிகளால் அலங்கரிக்கலாம். இளஞ்சிவப்பு, சாம்பல், இளமஞ்சள் போன்ற வண்ணங்களாலான சுவரொட்டிகளை இதற்குத் தேர்ந்தெடுக்கலாம்.

நாடகக் காட்சிகளில் வருவது போன்ற ரசனையான அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கை சுவருக்குப் பின்னால் முப்பரிமாண (3டி) சுவரொட்டிகளையோ வடிமைப்புகளையோ தேர்ந்தெடுக்கலாம். இந்த முப்பரிமாண வடிவமைப்புகளால் படுக்கையறை உங்கள் ரசனைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.

சுவரெழுத்துகளால் (Graffiti) படுக்கையின் சுவரை வடிவமைப்பதும் இப்போதும் பிரபலமாக இருக்கிறது. இந்தச் சுவரெழுத்துகள் வடிவமைப்பும் அறையின் தோற்றத்தை நாடகத்தன்மை கொண்டது போல் மாற்றும் ஆற்றல்கொண்டது.

எளிமையான அலங்காரத்தை விரும்புவர்கள், ‘ஜியோமெட்ரிக்’ வடிவமைப்புகளான சுவரொட்டிகளைப் படுக்கைச் சுவரில் அமைக்கலாம்.

படுக்கையறையில் பொருட்களை வைக்க வேண்டிய தேவையிருப்பவர்கள், படுக்கைக்குப் பின்னாலிருக்கும் சுவரில் அலமாரியை (Wardrobe) அமைக்கலாம். இந்த அலமாரி படுக்கையறையில் இடப்பற்றாக்குறை ஏற்படுத்துவதைக் குறைக்க உதவும். படுக்கைக்குப் பொருந்தும் வண்ணத்தில் இந்த அலமாரியை வடிவமைப்பது அறையின் தோற்றத்தை மெருகேற்றுவதற்கு உதவும்.

படுக்கைக்குப் பின்னாலிருக்கும் சுவரை மென் செலடான் பட்டு (soft celadon silk) அல்லது சாடின் திரைச்சீலைகளாலும் வடிவமைக்கலாம். ஆடம்பரமான அலங்காரத்தை விரும்புபவர்களுக்கு இந்தத் திரைச்சீலை அலங்காரம் ஏற்றதாக இருக்கும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *