பஞ்சாபிக்கு ஒரு நீதி? தமிழர்களுக்கு ஒரு நீதியா? மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த டாக்டர் ராமதாஸ்

பஞ்சாபிக்கு ஒரு நீதி? தமிழர்களுக்கு ஒரு நீதியா? மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த டாக்டர் ராமதாஸ்பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலை கைதி பல்வந்த்சிங்கின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மத்திய அரசு குறைத்த நிலையில் சீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் குருநானக்கின் 550வது பிறந்தநாளை ஒட்டி 550 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளார். அதில் பல்வந்த் சிங் ஒருவர். இவரை விடுதலை செய்ய முதலமைச்சர் அனுப்பிய அறிக்கைக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது

ஆனால் பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளூக்கும் மேலாக சிறையில் வாடும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டே அவர்களே விடுதலை செய்யலாம் என்று தெரிவித்திருந்தும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில், ‘பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலைக்கு காரணமான பயங்கரவாதி பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்கு தண்டனை, குருநானக் பிறந்தநாளையொட்டி ஆயுள்தண்டனையாக குறைத்தது மத்திய அரசு. சீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply