பசுமை வழிச்சாலை திட்டம்: அன்புமணிக்கு கிடைத்த முதல் வெற்றி

பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த காவல் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருவாரியான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சாலை குறித்து தா்மபுரி மாவட்ட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அத்தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால், இதற்கு காவல் துறையினா் அனுமதி வங்க முடியாது என்று கூறியதாகவும், காவல் துறையினரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும். தர்மபுரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தொகுதியின் எம்.பி. என்ற வகையில் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்பு கூட்டம் நடத்த காவல் துறையினா் முறையான கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனா். மேலும் மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *