shadow

நோயைத் தீர்த்து நலம் தருவார் நெல்லை ஸ்ரீகயிலாசநாதர்!

திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீகயிலாசநாதர் கோயில். அற்புதமான இந்தக் கோயிலுக்கு வந்து, கயிலாசநாதருக்கு வில்வம் சார்த்தி வேண்டினால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!

தன்னுடைய நோய் தீர்ந்ததால் குருந்து செட்டியார் என்பவர் இந்த ஆலயத்தை எழுப்பி, பல திருப்பணிகள் செய்துள்ளார். கொடிமரத்துக்கு அருகில் உள்ள தூண் ஒன்றில், செட்டியாரின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளதை இன்றைக்கும் காணலாம்!

அதேபோல், நல்லகண்ணு முதலியார் என்பவர் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளார். நிலங்களைத் தானமாக வழங்கி உள்ளார். இதுகுறித்த தகவல்கள் கோயிலின் வடகிழக்கு மூலையில் பொறிக்கப்பட்டு உள்ளது.

முருகேச முதலியார் எனும் சிவபக்தர், கோயிலை விரிவுபடுத்தி, முன்மண்டபம் எழுப்பி உள்ளதைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் மண்டபத்தின் இடது வலது பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளன!

வைகாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம், பத்துநாள் விழாவாக விமரிசையாக நடைபெறுகிறது. அதேபோல், கார்த்திகை மாதத்தில் ஸ்ரீகயிலாசநாதரை வணங்கினால், தீராத நோயும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்!

Leave a Reply