shadow

நோட்டீஸ் வழங்குவது மட்டும் விழிப்புணர்வு ஆகிவிடுமா? சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற மோட்டார் சட்ட விதிகளை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக கூடுதல் ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு 2016-ம் ஆண்டு 20 கோடி ரூபாயும், 2017-ம் ஆண்டு 42 கோடி ரூபாயும், 2018 ஜுலை வரை 15 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிக்னல்களில் நோட்டீஸ் வழங்குவது மட்டும் விழிப்புணர்வு ஆகிவிடுமா? என்றும், முறையான விழிப்புணர்வை வழங்கி இருந்தால் வழக்குகள் குறைந்திருக்காதா? எனவும் சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ள தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

Leave a Reply