நேர்கொண்ட பார்வை: வெறும் பத்து நிமிடம் தான் வித்யாபாலன் காட்சிகள்?

தல அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக பாலிவுட் நடிகை வித்யாபாலன் இரண்டு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

மேலும் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யாபாலன் தோன்றும் காட்சி வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே என்றும் அதிலும் ஒரு பாடல் நான்கு நிமிடங்கள் போய்விட்டால் ஆறு நிமிடங்கள் மட்டுமே அவர் வசனம் பேசும் காட்சியில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது

Leave a Reply