நேபாள அணியிடம் முதல்முறையாக தோல்வி அடைந்த இந்திய கிரிக்கெட் அணி

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரின் லீக் போட்டி ஒன்றில் நேபாளம் இந்தியாவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னர் இந்தியாவும் நேபாளமும், இரண்டு முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும், மூன்று முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையிலும் விளையாடியுள்ளது. ஆனால் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வென்ற நிலையில் தற்போது முதல் வெற்றியை பெற்றுள்ள நேபாள அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நேபாள பிரதமர் தனது வாழ்த்துக்களை அணிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, நேபாளத்தின் அபார பந்து வீச்சால் 48.1 ஓவரில் 166 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நேபாளர் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேபாள அணியின் திபேந்திர சிங் 88 ரன்கள் அடித்ததுடன், 39 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *