நேசமணியில் காட்டிய வேகத்தை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாமே!

நேற்று மாலை முதல் டுவிட்டரில் நேசமணி என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. எதற்காக இந்த டிரண்ட் என்று தெரியாமல் பலர் திகைத்து வருகின்றனர். இந்த டிரெண்ட் இதனால்தான் என்று தெரிந்தவர்கள் ‘இவ்வளவுதானா? இதற்கா இத்தனை களேபரம்’ என்று கூறி வருகின்றனர்.

ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத ஒன்றை உலக அளவில் டிரெண்டாக்கும் நெட்டிசன்கள் இதே வேகத்தை ஸ்டெர்லைட் பிரச்சனையின்போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் காண்பித்திருக்கலாமே! என்பதுதான் பலருடைய ஆதங்கமாக உள்ளது.

இண்டர்நெட் என்ற சக்திவாய்ந்த் ஆயுதத்தை சமூக பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினால் நல்லது என்பதே அனைவரின் குரலாக உள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *