நீலகிரி ராணுவ கல்லூரியில் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

indian armyநீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள Defence Services College-Fல் ஸ்டெனோகிராபர், டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Stenographer Grade II- 01
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் 10 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை கணினியில் ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Draughtsman – 01
தகுதி: +2 தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மேன்ஷிப்பில் 2 வருட டிப்ளமோ அல்லது டிராப்ட்ஸ்மேனில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100.

பணி: Lower Division Clerk – 01
தகுதி:+2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Gestener Operator – 01
தகுதி: +2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200.

பணி: Multi Tasking Staff – 04
சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்டுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.dssc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Colonel Adjutant,
DSSC, Wellington,
The Nilgiris District.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2016.
மேலும் விவரங்கள் அறிய http://www.dssc.gov.in/recruitment/Recruitment-2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *