நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தின் 68 ஓவியங்கள் விற்பனை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து பலகோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்ற பிரபல வைரவியாபாரி நீரவ் மோடி சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது

இந்த நிலையில் நீரவ் மோடியின் கேம்லாட் நிறுவனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற 68 ஓவியங்களை விற்க வருமானவரித்துறை முடிவு செய்தது. இதனை எதிர்த்து கேம்லாட் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீரவ் மோடியின் கேம்லாட் எண்டர்பிரைசஸ் நிறுவன மனுவைத் தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *