நீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை மோடி அரசு நாட்டின் ஜனநாயகத்துக்கும்,நாட்டின் அரசியமைப்புவழங்கியுள்ள கூட்டாட்சி அமைப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். பாஜகவின் பொய்களால்நீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது.

தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மகத்துவத்தைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கும், அதன் அமைச்சர்களுக்கும் எந்தவிதமான உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை. பாஜகவின் இந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எவ்வாறு நடத்தினார்கள், அரசியலைப்புச்சட்டவிதிமுறைகளை எப்படி கேலிக் கூத்தாக்கினார்கள் என்பது தெரியும், இவர்களின் 5 ஆண்டுகள் ஆட்சியும் வெட்கப்படக்கூடிய அளவுக்கு இருக்கிறது.

மோடி அரசு, இரு மாநில அரசுகளை கலைக்க முற்பட்டு, அதைத் தோல்வியில் முடிந்தது. நாட்டில் பாஜக இல்லாத அரசும் எந்த மாநிலத்திலாவது இருந்தால், அந்த அரசின் கழுத்தை நெறித்து, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளாமல் மோடி அரசு இருந்ததுண்டா.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை எவ்வாறு செயல்படவிடாமல் செய்து, அதில் குழப்பத்தை ஏற்படுத்தி சிக்கல் உண்டாக்கியதற்கு சிறந்த உதாரணம் டெல்லி அரசுதான்.

இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *