நீட் தேர்வு பின்னடைவுக்கு காரணம் நளினிதான்: சட்டமன்றத்தில் காரசார விவாதம்

நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அரசை கண்டித்து கண்டன தீர்மானம் போட முடியாது என்றும், உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் நீட் தேர்வை கொண்டு வருவதற்காக வாதாடியவர் நளினி சிதம்பரம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வுக்கு எதிராக, ஜெயலலிதா எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டதாகவும், நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக கடுமையாக போராடிய நிலையில் நளினி சிதம்பரம் வழக்கு தொடுத்ததால் பின்னடைவு ஏற்பட்டது என்றும் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *