நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் +2 தேர்வில் எவ்வளவு தெரியுமா?

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்தியாவிலேயே நீட் தேர்வில் முதல் மாணவனாக வென்றவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நலின் காண்டேல்வால் என்பவர். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

ஆனால் இவர் இந்த ஆண்டு எழுதிய +2 தேர்வில் வெறும் 57% மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளார். நீட் தேர்வுக்காக தினமும் 8 மணி நேரம் படித்த இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. +2 தேர்வில் 57% மதிப்பெண்கள் எடுத்தபோதிலும் தன்னம்பிக்கையுடன் படித்ததால் இன்று இந்தியாவே பேசும் நிலையில் உள்ளார்.

 

Leave a Reply