‘நீங்க வெர்ஜினா? ‘நேர் கொண்ட பார்வையில் அஜித் கேட்கும் அதிரடி கேள்வி!

அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றது. ‘நீங்க வெர்ஜினா? என்ற அஜித்தின் கேள்வியும் ‘அப்படியெல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது’ என்ற வசனங்களும், ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்திறீங்க’ என்று அஜித் கூறும் காட்சிகளும் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பை பெறும்

அஜித்தின் ஆவேசமான உணர்ச்சிவசப்படும் நீதிமன்ற காட்சிகள், ரங்கராஜ் பாண்டேவின் பதில் வாதம், நீதிபதி உள்பட அனைவரும் ஆகும் டென்ஷன் என புதுமையான நீதிமன்ற காட்சிகள் இந்த படத்தில் உள்ளது

யுவன்ஷங்கர் ராஜா பின்னணி இசையில் புகுந்து விளையாடியுள்ளார். அதேபோல் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, எச்.வினோத்தின் கூர்மையான வசனங்கள் என படம் முழுவதும் ரசிக்கும் வகையில் உள்ளது

Leave a Reply