நீங்கள் வெர்ஜினா? அஜித் கேட்ட கேள்வியை பிரபல நடிகையிடம் கேட்ட ரசிகர்!

பிரபல நடிகை ஒருவரிடம் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் உரையாடும்போது ‘நீங்கள் வெர்ஜினா’ என்று கேட்ட கேள்வியால் நடிகை டென்ஷன் ஆனது பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ‘நீங்கள் வெர்ஜினா’ என்று நாயகி ஷாராதா ஸ்ரீநாத்தை பார்த்து அஜித் கேட்கும் கேள்விதான் படத்தின் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடிகை நிவேதா தாமஸ் ரசிகர்களிடம் சமூக வலைத்தளத்தில் உரையாடியபோது ஒரு ரசிகர் ‘நீங்கள் வெர்ஜினா’ என்று கேட்டதால் டென்ஷாகிவிட்டார்.

மற்றவர்களுடன் பேசும்போது மரியாதையும் கண்ணியமாகவும் பேசுங்கள் என்றும் நீங்கள் சக மனிதர்களிடம் பேசுகிறீர்கள் என்பதை மனதில் ஞாபகம் வைத்து பேசுங்கள் என்றும் அந்த ரசிகரை வறுத்தெடுத்துவிட்டார். கேள்வி கேட்ட அந்த ரசிகர் தனது கேள்வியை டெலிட் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply