shadow

நீங்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவரா? அப்ப இதை தெரிந்து கொள்ளுங்கள்

இன்ஸ்டாகிராம் சேவையில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அந்நிறுவனம் மேலும் சில அம்சங்களை சோதனை செய்கிறது.

இன்ஸ்டாகிராம் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை இன்ஸ்டா பயனர்களை மற்றவர்களுடன் இணைய வைக்கும் வகையில் இருக்கிறது.

இரண்டு அம்சங்களில் ஒன்றாக நேம்டேக்ஸ்  இருக்கிறது. இந்த அம்சம் பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய கிராஃபிக்ஸ் படங்கள் ஆகும். இது கியூ.ஆர். கோடுகளை போன்று வேலை செய்கின்றன. செயலியினுள் இவற்றை ஸ்கேன் செய்ததும், பயனர் குறிப்பிட்ட பயனரின் ப்ரோஃபைலுக்கு நேரடியாக செல்ல முடியும்.

நேம்டேக்ஸ்-களை பல்வேறு விதங்களில் மாற்றிக் கொள்ள முடியும். பயனர்கள் நேம்டேக் நிறம், எமோஜி அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளலாம். பயனர்கள் நேம்டேக்ஸ்-ஐ இன்-ஆப் கேமரா மூலம் ஸ்கேன் செய்யவோ அல்லது நேம்டேக் வியூ பட்டனை கிளிக் செய்து பெற முடியும். இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்கனவே நேம்டேக்ஸ் இருக்கிறது.

மற்றொரு அம்சம் டைரக்டரி போன்று வேலை செய்கிறது. இது பயனர்களை அவரவர் படித்த கல்லூரிகளின் அடிப்படையில் பிரிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அவர்களது கல்லூரி தோழமைகளுடன் இணைப்பில் இருக்க முடியும். மாணவர்கள் தங்களது நண்பர்களை இன்ஸ்டாகிராமில் கண்டறிய இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் பயனர்களை கல்லூரி கம்யூனிட்டி ஒன்றில் இணையக் கோரும், பின் மற்ற மாணவர்களுடன் இணைக்கும் ஆப்ஷனை வழங்கும். எனினும் கம்யூனிட்டியை பயனர் தேர்வு செய்தால், அவர்களது பட்டப்படிப்பு ஆண்டு அவர்களின் ப்ரோஃபைலில் சேர்க்கப்படும். மேலும் மாணவர்களை அவரவர் படிக்கும் வகுப்புவாரியாகவும் பிரிக்கிறது.

பயனர்கள் தங்களது நண்பர்களை வீடியோவில் டேக் செய்யும் ஆப்ஷனையும் இன்ஸ்டாகிராம் வழங்குகிறது. போட்டோக்களில் இருப்பதை போன்று இல்லாமல், புதிய அம்சம் டேக் செய்யப்பட்ட அனைவரையும் காண்பிக்கும் தனி பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சில பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிற

Leave a Reply