shadow

நிவாரண பொருட்களுடன் கேரளாவுக்கு செல்லும் 3 கப்பல்கள்: நிதின்கட்காரி

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அம்மாநில மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வரும் நிலையில் கேரளாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரம் நீண்டுள்ளது. அந்த வகையில், தூத்துக்குடியில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் 3 கப்பல்கள் கொச்சி துறைமுகம் செல்லும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், எஸ்.எஸ்.பாரத் என்ற கப்பல் ஆகஸ்ட் 23 ம் தேதி புறப்படும் என கூறியுள்ளார். இதேபோல, லால்பகதுர் சாஸ்திரி என்ற கப்பல் ஆகஸ்ட் 30 ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.டெல்லி என்ற மற்றொரு கப்பல் செப்டம்பர் 6 ம் தேதியும் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் என நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவுக்கு விமானப்படையின் 90 விமானங்களும், 500 விசைப்படகுகளும் அனுப்ப, தேசிய பேரிடர் மீட்பு குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply