shadow

நிதின்கட்காரி பிரதமர் வேட்பாளரா? சிவசேனாவின் அதிரடியால் பாஜகவில் திருப்பம்

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது எந்த அளவுக்கு நாடு முழுவதும் மோடி அலை இருந்ததே, அதே அளவு இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை உள்ளது. பாஜகவின் முக்கியா கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளே பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளது

இந்த நிலையில் தேர்தலுக்கு பின் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் வந்தால் பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என்றும், ஆனால் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு பதில் நிதின்கட்காரி இருக்க வேண்டும் என்றும் சிவசேனா நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் பாஜக தலைமை பிரதமர் வேட்பாளரை மாற்ற முடிவு செய்திருப்பதாகவும், மோடிக்கு பதிலாக ஆதித்யநாத் யோகி அல்லது நிதின்கட்காரி ஆகிய இருவரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *