நாளை ரஜினி மகள் திருமணம்: முதல்வருக்கு அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். முதல்வரும் திருமணத்தில் கலந்து கொள்ளா சம்மதம் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *