Chennai Today News

நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி: பதிலடி கொடுக்குமா இந்தியா?

நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி: பதிலடி கொடுக்குமா இந்தியா?

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணியில் விராத் கோஹ்லி, தவான், ஜடேஜா, தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ்மேன்களும், அஸ்வின், பும்ரா, குல்தீப், ஷமி போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தும் படுதோல்வி அடைந்துள்ளது.

நாளைய டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை இந்திய அணி நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!