shadow

நாளை மறுநாள் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுனரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் ஆளுனரிடம் இருந்து இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க நாளை மறுநாள் ஆளுநர் மாளிகை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவின் இந்த அறிவிப்பு காரணமாக நாளை மறுநாள் கவர்னர் மாளிகை முன் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *