நான் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் தோற்றுவிடும்: காங்கிரஸ் பிரமுகர் திக்விஜய்சிங்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெற உள்ளதாக சமீபத்தில்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகள் வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை செது வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முக்கிய தலைவருமான திக்விஜய் சிங் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ஓட்டுக் கேட்டு வந்தாலோ, பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று பேசினாலோ காங்கிரஸ் கட்சி தோற்கும் நிலைக்கு செல்லும், ஓட்டுகள் குறைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. அதிக அளவில் அனைவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெல்லும், நண்பனா, எதிரியா என பார்க்காமல் அனைத்து தொண்டர்களும் வேலை செய்ய வேண்டும்’ என்று கூறினார்

திக்விஜய் சிங்க்கின் கருத்து குறித்து பதிலளித்த மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத் “எந்த அடிப்படையில் திக் விஜய் சிங் இது போன்று கருத்து தெரிவித்தார் என தெரியவில்லை, ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள், தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *