Chennai Today News

நான் ‘பிக் பாஸ் 2’ பார்ப்பதில்லை’: ஓவியா

நான் ‘பிக் பாஸ் 2’ பார்ப்பதில்லை’: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஓவியா, தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தான் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்றுடடுவிட்டரில் பதில் அளித்த ஓவியாவிடம் ஒரு ரசிகர் ‘பிக் பாஸ் 2 பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓவியா, ‘எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், நான் ‘பிக் பாஸ் 2’ பார்ப்பதில்லை’ என்று தெரிவித்தார்

‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் இடத்தை நிரப்ப யாரும் இல்லை. மும்தாஜ், அவருடைய பாணியில் நன்றாக விளையாடுகிறார். ஆனால், ஓவியா தான் லெஜண்ட்’ என்று ஒரு ரசிகர் சொல்ல, ‘எல்லாருமே நல்லவர்கள் தான். நான் ‘பிக் பாஸ்’ பார்ப்பதில்லை’ எனத் தெரிவித்துள்ளார் ஓவியா.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!