நானும் அரசுப் பள்ளி மாணவன்தான்: கவிஞர் வைரமுத்து

நானும் அரசுப் பள்ளி மாணவன்தான் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:

மகிழ்ச்சி…

அரசுப் பள்ளிகளில்
அதிகரிக்கிறது
மாணவர் சேர்க்கை

நல்ல சமயமிது
நழுவ விடலாமோ?

தாய்மொழிவழிக் கல்வியைத்
தாங்கிப் பிடிப்போம்

கட்டமைப்பைக்
கட்டியெழுப்புவோம்

தனியார் பள்ளியினும்
தரம் கூட்டுவோம்

நாட்டுக்கு நம்பிக்கை தருவோம்
நானும்
அரசுப் பள்ளி மாணவன்தான்.